விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து தி'ரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்...  என்னும் லிரிக் வீடியோ மாஸ் ஆக்ஷனுடன் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் மூவி :

மாஸ்டரை தொடர்ந்து விஜயின் நெக்ஸ்ட் மூவி பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோரும் உள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு :

பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கியும்மை இந்த படம் சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், நூறாவது நாள் படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

மேலும் செய்திகளுக்கு...Ileana : தாராள கவர்ச்சியில் தாறுமாறு போஸ்... தீயாய் பரவும் நடிகை இலியானாவின் ஹாட் போட்டோஸ்

டாக்டர் காம்போ சிங்கிள் : 

 சிவகார்த்திகேயன், அனிரூத், நெல்சன் காம்போ டாக்டர் படத்தின் மூலம் ஹிட் கொடுத்திருந்தது. அந்த பாணியில் அரபிக் குத்து என்னும் பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிரூத் இசையமைத்து பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. இதையடுத்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.

 பீஸ்ட் ட்ரைலர் :

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன் படி சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது. 

மேலும் செய்திகளுக்கு...Shah rukh Khan : காத்திருந்த அட்லீ... கால்ஷீட் கொடுத்த ஷாருக்கான் - மீண்டும் தொடங்கியது ‘லயன்’ ஷூட்டிங்

மூன்றாவது சிங்கிள் :

இந்நிலையில் பீஸ்டட் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும் என்னும் துவங்கும் இந்த பாடலை விவேக் எழுத இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார்.

YouTube video player