விஜயின் பீஸ்ட்  படத்திலிருந்து அரபிக் குத்து பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.. வேற லெவலில் டாக்டர் மோடில் உருவாகியுள்ளது..

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், பீஸ்ட் படதிலிருந்து முதல் சிங்களுக்கான மாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது...அதில் நெல்சன் - சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போவில் பீஸ்ட் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான மேக்கிங் ஷூட் இடம் பெற்றுள்ளது... இந்த சூட்டிங்கில் விஜய் கைபேசியில் பேசுவது போல மட்டுமே கட்டப்பட்டுள்ளது.. தகவல் வெளியாகியுள்ளது.. நெல்சன்-அனிரூத் இருவரும் பாடல் குறித்து டிஸ்கஷன் செய்கின்றனர்.. எந்த பாடல் என முடிவெடுக்கையில் அனிரூத் அரபிக் பாடல் போடலாம் என கூறுகிறார்..பின்னர் பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் காட்டப்படுகிறார்.. பின்னர் பிடல் ரெடியானதும் விஜயிடம் கூறப்படுகிறது..ஆனால் விஜய் அரபிக் குத்து என கேள்விப்பட்டதும் ஷாக் ஆகிறார்.. பின்னர் மாரு நாள் காலையில் பாடலை எடுத்து வர சொல்கிறார்..இந்த ப்ரோமோவின் மூலம் காதலர் தினத்தன்று முதல் சிங்கிள் வெளியாகும் என தெரிகிறது..

YouTube video player

ஏற்கனவே டாக்டர் படத்தின் பாடலுக்கான லிரிக் வீடியோக்களின் ஆரம்பத்தில், மூவரும் இணைந்து அடிக்கும் லூட்டியும் மிகப் பெரிய அளவில் வைரலாகியிருந்தது. தற்போது, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திலும், அப்படி ஒரு காம்போ உருவாகியுள்ளதால், முதல் பாடல் எப்போது வெளிவரும் என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.