விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா'. கருப்பு நிறம், அழகு இல்லை என்று தன் குடும்பத்தால் ஒதுக்கப்படும் பெண்ணை, திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் நாயகன் பாரதி மனதில் வளரும் சந்தேகத்தால் தற்போது வீட்டையே விட்டு வெளியேறி தெருத்தெருவாக ஒரு பையுடன் சுற்றி வருகிறார் கண்ணம்மா.

வெண்பாவின் சூழ்ச்சி எப்போது பாரதிக்கு தெரிய வரும், எப்போது கண்ணம்மா வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை தான் என்கிற உண்மை பாரதிக்கு தெரியும் என ஆவலோடு கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். இப்படி விறுவிறுப்பான திருபுனைகள் இருந்தாலும், மிகவும் பொறுமையாக செல்கிறது கண்ணம்மாவின் பயணம்.

வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா... தன்னுடைய பையுடன் இருக்க இடம் தேடி தெருத்தெருவாக சுற்றுகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக பல மீம்ஸுகள் வெளியாகியது.

இந்நிலையில் இந்த சீரியல் நாயகி ரோஷ்ணி , தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஒரு வாரமாக கையில் பையுடன் சுற்றும் கண்ணம்மா பேகில் வைத்திருப்பது என்ன? என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 

அப்படி அந்த பையில் என்ன ரகசியம் தான் இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்...