பாகுபலி படத்தின் முதல் பாகம் 2015 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது . இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என ஒரு ட்விஸ்ட்டை ஏற்படுத்தி இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் ராஜா மௌலி, அதே போல இந்த படத்தின் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் பல காலம் ரகசியம் காத்து வந்தது படக்குழு.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பிகளும் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.