bagath fasil removed manirathnam movie
மணிரத்னம் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு தற்போது முன்னணி நடிகர்களை கொண்டு இயக்கி வருகிறார். இப்படத்திற்கான தலைப்பு இன்னும் சூட்டப்படவில்லை.
நட்சத்திர கூட்டம்
இப்படத்தில் அரவிந்த் சாமி,விஜய் சேதுபதி, சிம்பு,மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், ஜோதிகா, அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
சிம்பு
முதலில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்ததாக கூறப்பட்டது.
AAA படத்திற்காக உடல் எடையை வெகுவாக ஏற்றியிருந்த சிம்பு தற்போது மணிரத்னம் படத்திற்காக முழு மூச்சில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆனது.
விலகும் ஃபகத் ஃபாசில்
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை

வேலைக்காரன்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலைக்காரன். இந்த படத்தில் தான் ஃபகத் ஃபாசில் வில்லனாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
