இந்திய திரையுலகினர் அனைவருடைய எதிர்பார்ப்பையும் பெற்ற "பாகுபலி 2" அடுத்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. முதல் பாகத்தில் பல்வேறு கேள்விகளை ரசிகர்களுக்குள் விதைத்த ராஜமௌலி இரண்டாம் பாகத்தில் விடை கூறுவார் என்பதால் அதிக அளவு எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் வெளியான "பாகுபலி 2" படத்தின் ட்ரைலர் இணையத்தளத்தில்  10 கோடிக்கும் மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, உலக அளவில் 7 வது இடத்தை பெற்றும் . இந்திய அளவில்  முதல் இடத்தை பிடித்தும்  சாதனை படைத்த  படமும் இதுதான்.

இந்நிலையில் இந்த படம் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்கிற தகவல் தற்போது  வெளியாகியுள்ள்ளது, மேலும் ரிலீஸ் விஷயத்திலும்  "பாகுபலி2" சாதனை படைத்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் "பாகுபலி2" 6500 தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது, அமெரிக்காவில் 750 தியேட்டர்களிலும், உலகம் முழுதும் உள்ள மற்ற நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.