கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் அந்த மலையாள திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அய்யப்பன் நாயரை அட்டப்பாடி தமிழ் பழங்குடியாக காட்சிப்படுத்தியுள்ள இயக்குநர், பிரத்யேக பாடல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 

இதையும் படிங்க: அடிக்கிற வெயில் போதாதுன்னு அனலை கிளப்பும் ஷாலு ஷம்மு... குளியல் தொட்டிக்குள் குட்டை உடையில் அட்ராசிட்டி...!

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பலரும் கைப்பற்ற போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியது. இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக இருந்தனர். அதே சமயத்தில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் கூட இந்த படத்தில் அண்ணன், தம்பிகளான சூர்யா, கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை இருவரும் மறுத்தனர். 

 

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை அழகில் மெருகேறி ஜொலிக்கும் அஞ்சலி... பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...!

கோலிவுட் ரசிகர்கள் படத்தின் தமிழ் ரீமேக்கை காண ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநரும், பிரபல திரைக்கதை ஆசிரியருமான சச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் சச்சி இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று திடீரென மாராடைப்பு ஏற்பட்டுள்ளது, உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தியில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், கன்னடத்தில் சிரஞ்சீவி சார்ஜா என அடுத்தடுத்து மரணங்களால் திரைத்துறையே அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், இந்த செய்தி பிரபலங்களை வேதனையடைய வைத்துள்ளது. இயக்குநர் சச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட பிருத்விராஜ் உடனடியாக நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.