Super Star Rajinikanth : தமிழ் சினிமாவில் 90 ஆண்டுகளை கடந்து பயணித்து வரும் பட தயாரிப்பு நிறுவனம் தான் பிரபல ஏவிஎம் நிறுவனம். அதன் நினைவாக தங்களது படங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றது ஏவிஎம் நிறுவனம்.

தமிழ் திரை உலகில் கடந்த 1935 ஆம் ஆண்டு வெளியான "அல்லி அர்ஜுனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக தமிழில் உருவெடுத்தவர்கள் தான் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி என்று இந்திய மொழிகள் பலவற்றுள் 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இன்றளவும் தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகின்றனர். 

தமிழ் திரை உலகில் வெளியான பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து வழங்கியது இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 1983ம் ஆண்டு பிரபல நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதா நடிப்பில், இளையராஜா இசையில் வெளியான ஏவிஎம்மின் 126வது திரைப்படம் தான் "பாயும் புலி". 

Bhanupriya School Drop Out: பாக்யராஜால் ஏற்பட்ட அவமானம்.! பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்திய பானுப்பிரியா.!

எஸ்பி முத்துராமன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலத்தின் திரைக்கதையில் அமைந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறியது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பயன்படுத்திய சுசுகி பைக் ஒன்றை சுமார் 40 ஆண்டுகள் கடந்தும் பராமரித்து வருகின்றது ஏவிஎம் நிறுவனம். 

சென்னையில் அந்த நிறுவனம் நடத்தி வரும் கண்காட்சியில் தற்பொழுது அந்த சுசுகி பைக் இடம்பெறச் செய்துள்ளது. அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏவிஎம் நிறுவனத்தின் அந்த கண்காட்சியை பார்வையிட சென்ற பொழுது, 40 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பாயும் புலி படத்தில் பயன்படுத்திய அதே பைக்கில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார். 

Scroll to load tweet…

தற்பொழுது அந்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது ஏவிஎம் நிறுவனம். "ஏவிஎம் மியூசியம்" என்ற பெயரில் சென்னையில் செயல்பட்டு வருகிறது அந்த கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர் மீது தாக்குதல்.. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யகோரி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்!