Audit Committee reports that censorship certificate has not been issued as all works for Merseyside have been completed

மெர்சல் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என தணிக்கை குழு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் மெர்சல் திரைப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுமார் 130 பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. 

மெர்சல் படத்தில் புறா வரும் காட்சிகள் மற்றும் பாம்பு பெயர் உள்ளிட்ட பிரச்சனைகளில் விலங்கு நல வாரியம் அனுமதி தரவில்லை. இதனால் திட்டமிட்டபடி தீபாவளியன்று மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என தணிக்கை குழு விளக்கம் அளித்துள்ளது.

காரணம் படத்திற்கு விலங்கு நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தணிக்கை சான்று வழங்கவில்லை என தணிக்கை குழு விளக்கம் அளித்துள்ளது.