பாகுபலியை ஓவர்டேக் செய்கின்றது அட்லீயின் ஜவான்.. உலக அளவில் பட்டையை கிளப்பும் வசூல் - எத்தனை கோடி தெரியுமா?
முதல்முறையாக பாலிவுட் உலகில் இயக்குனராக களம் இறங்கிய அட்லி குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜவான். பாலிவுட் உலகின் பாட்ஷாவாக கருதப்படும் ஷாருக்கான் நடிப்பில் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களுடைய மனைவி கௌரி கான் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் ஜவான். முதல் முறையாக இயக்குனர் அட்லி அவர்கள் பாலிவுட்டில் களமிறங்கிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் முதல் முறையாக தனது பாலிவுட் என்ட்ரியை கொடுத்தார் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோனே மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் தற்பொழுது 35 நாட்களை தாண்டி ஓடிவரும் நிலையில் சுமார் 1117 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய ஹிட் திரைப்படமாக மாறி வருவதாக பல திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சர்ச்சை எதிரொலி... விஜய் பேசிய கெட்ட வார்த்தையை மியூட் பண்ணிய சென்சார் போர்டு
இந்நிலையில் இந்த திரைப்படம் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பேஸ் ஒன் வசூலை தாண்டி இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழில் தளபதி விஜய் அவர்களை வைத்து மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி அவர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் உலகில் தனது கால் தடத்தை பதிக்க தயாராக இருந்தார்.
இந்த சூழலில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாலிவுட் பாஷாவான ஷாருக்கானை இயக்குகின்ற ஒரு மாபெரும் வாய்ப்பு. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ஒரு மாபெரும் ஹிட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் அட்லீ என்று பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.