லியோ பட டிரைலரில் நடிகர் விஜய் பேசிய கெட்ட வார்த்தைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதனை சென்சார் போர்டு மியூட் பண்ணி உள்ளது.

நடிகர் விஜய்யின் 67-வது படமான லியோ வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் உடன் திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள லியோ படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த டிரைலரில் நடிகர் விஜய், ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசி இருந்தார். அதனை சென்சார் செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முன்னணி நடிகராக இருந்துகொண்டு விஜய் இப்படம் கெட்ட வார்த்தை பேசி நடித்துள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்படி விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய்யை நான் தான் வற்புறுத்தி கெட்டவார்த்தை பேச சொன்னேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

அவர் விளக்கம் அளித்த பின்னரும் சர்ச்சை தொடர்ந்து வந்ததால், தற்போது லியோ பட டிரைலரில் இருந்த கெட்ட வார்த்தை அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது. விஜய் கெட்ட வார்த்தை பேசிய காட்சியில் மியூட் செய்துள்ளனர். யூடியூப்பிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் படக்குழு ஆபாச வசன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

LEO - Official Trailer | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

இதையும் படியுங்கள்...வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள விஜய் டிவி பிரபலம்... ஆஹா இவங்க டேஞ்சரான ஆளாச்சே!