athithi rav avoid telungu actor vengatesh movie

'ஸ்ரீநகரம்' படத்தை தொடர்ந்து 10 வருட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'பத்மாவத்' படத்திலும் அவர் மெகருன்னிஷாவாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் சுதீர் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவரிடம் இயக்குனர் தேஜாஸ் இயக்கத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு அதிதி ராவ் நடிகர் வெங்கடேஷ் வயதை கருத்தில் கொண்டு இந்த பட வாய்ப்பை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது இந்த வாய்ப்பு பல நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பல இயக்குனர்களுக்கு கொக்கி போட்டு வந்த நடிகை ஸ்ரேயாவுக்கு சென்றுள்ளது. முன்னணி நடிகர் வெங்கடேஷ் சீனியர் ஹீரோ என்பதால் தான் அதிதி ராவ் இவருடன் நடிக்க மறுத்ததாக பரவி வரும் தகவல் டோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.