Assistant to listen to the story

விக்ரம் பிரபு ஏற்றுக் கொள்கிற கேரக்டருக்கு முடிந்தவரை உயிரைக் கொடுத்து நடிப்பவர்தான். ’கும்கி’ மெகா ஹிட்டடிக்க அடுத்தடுத்து வந்த ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ படங்களும் விக்ரம் பிரபுவை கவனிக்கத்தக்க இடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தது.

அதன்பிறகுதான் சோதனை… ‘வெள்ளைக்கார துரை’, ‘வீரசிவாஜி’ என எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

கடந்தவாரம் ரிலீஸான ‘சத்ரியன்’ படத்திலும் குறைவைக்காத நடிப்பையே தந்திருந்தார். பலன்தான் கேள்விக்குறி!

முன்பொரு பேட்டியில் ’நீங்க நடிக்க ஒத்துக்கிற படங்களுக்கு கதை கேட்குறது யாரு?’ என்றபோது, ‘நானேதான் கேட்பேன்’ என சொல்லியிருந்தார்!

அப்படி அவரே கதை கேட்டு நடிப்பதாலோ என்னவோ தொடர்ச்சியாக அவரது படங்களுக்கு ஆடியன்ஸ் அப்ளாஸ் இல்லாமலே போகிறது போலிருக்கிறது.

இதை தாமதமாக உணர்ந்த விக்ரம்பிரபு ’இனிமேலும் இப்படியே போனால், நடிப்பை மூட்டை கட்டிவிடும்படி ஆகிவிடும்’ என சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து கதை கேட்க அப்பா பிரபுவை துணைக்கு சேர்த்துகொள்ளவிருப்பதாக கேள்வி!