Asianet News TamilAsianet News Tamil

செம்ம வைப்.. பார்ட்டி மோடில் அசோக் செல்வன் - கீர்த்தி! தில்லானா தில்லானா... பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரல்

அசோக் செல்வன் மற்றும் - கீர்த்தி பாண்டியன் இருவரும், தன்னுடைய மேரேஜ் பார்ட்டியில் செம்ம வைப்பில் சூப்பர் ஸ்டார் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Ashok Selvan and Keerthi Pandiyan Dance in Marriage Party Video goes viral mma
Author
First Published Sep 21, 2023, 5:28 PM IST

தமிழ் திரையுலகில், குணச்சித்திர வேடத்தில் அறிமுகமாகி பின்னர் ஹீரோ வாய்ப்பை எட்டிப்பிடித்தவர் அசோக் செல்வன். இவர் ஹீரோவாக நடித்த தெகிடி, இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதிலும் அடுத்தடுத்து வெளியான படங்கள், தோல்விப்படங்களாகவே அமைந்தது. ஆனால் விடாமுயற்சியுடன் சிறந்த படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, போர்தொழில் போன்ற படங்கள் அசோக் செல்வனுக்கு வெற்றியை தேடி கொடுத்தது.

Ashok Selvan and Keerthi Pandiyan Dance in Marriage Party Video goes viral mma

தற்போது கை நிறைய படங்களுடன் படு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிக்கும் அசோக் செல்வன். பா.ரஞ்சித் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்த போது, அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனை காதலிக்க துவங்கினார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பச்சை கொடி காட்டிய நிலையில், இந்த படம் வெளியாவதற்கு முன்பே, திருமணத்தையே நடத்தி முடித்துவிட்டனர். மேலும் இவர்களின் திருமண பரிசாக, 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இருந்து அழகிய காதல் பாடல் ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Ashok Selvan and Keerthi Pandiyan Dance in Marriage Party Video goes viral mma

இவர்களின் திருமணம், நடிகரும் - தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள, பண்ணைவீட்டில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பசுமை விருந்து பரிமாறப்பட்டது. 

Ashok Selvan and Keerthi Pandiyan Dance in Marriage Party Video goes viral mma

திருமணத்திற்கு பின்னர், சென்னையில் இவர்களுடைய திருமண ரிசப்ஷன் நடந்தது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் சூர்யா, கார்த்திக், வாணி போஜன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உட்பட அனைவருமே கலந்து கொண்டனர். திருமண பார்ட்டியின் போது கீர்த்தி மற்றும் அசோக் செல்வன் இருவருமே 80'ஸ் கெட்டப்பில் இருந்தனர். இந்த பார்ட்டியில் செம்ம வைப்புடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும், தில்லானா... தில்லானா... பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by EditorRam (@ashokselvanfp)

 

Follow Us:
Download App:
  • android
  • ios