வேற்றுகிரக வாசிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் 'எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்'. இதில் நாயகனாக ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஆரி நடிக்கிறார். 

இப்படத்தினை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத் தொகுப்பாளராக பணிபுரிகிறார். அறிமுக இயக்குநரான கவிராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் ஆர்யா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.