arya propose the famous heroine
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகைகளிடமும் நன்கு பேசிப் பழகுபவர் நடிகர் ஆர்யா. பலரும் இவரை பிளே பாய் என்றுதான் கிண்டல் செய்வார்கள். இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் தற்போது வெற்றிப்படத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற முழு முயற்சியில் இறங்கியுள்ளார். எனினும் நடிகைகளை கிண்டல் செய்வதையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமலாபால் வரி ஏய்ப்புப் பிரச்னை குறித்து ஒரு டுவிட் போட்டிருந்தார். அவரின் அந்த டுவிட்டிற்கு ஆர்யா சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில் போகலாம் என்று கலாய்த்திருந்தார். #JustKidding.
உடனே அமலாபால் பதில் கொடுக்க, கடைசியில் ஆர்யா, உனக்காகத் தான் சேமித்து மிச்சப்படுத்திக்கொண்டு இருக்கிறேன் ஐ லவ் யு அமலா #NotKidding என்று பதிவு செய்திருக்கிறார்.
கடந்த வருடம்தான் இயக்குனர் விஜயிடம் இருந்து விவாகரத்து பெற்று நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அமலா பாலிடம் இப்படி ஆர்யா பேசியுள்ளது திரையுலகில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
