இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்த 'சார்பட்டா' பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

நடிகர் ஆர்யாவின் மிரட்டல் நடிப்பில், வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும், இந்த படத்தின் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆங்கிலேயரின் ரோஷமான பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஆர்யா தன்னுடைய உடலை கடும் பயிற்சிகள் உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டு மஸ்தான தோற்றத்திற்கு மாற்றி பலரையும் பிரமிக்க வைத்தார்.

இந்த படத்திற்கு இவர் போட்ட உழைப்பு பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது மட்டும் இன்றி, படத்தையும் வெற்றிப்படமாக மாற்றியது. ஒருவேளை இப்படம், திரையரங்கில் வெளியாகி இருந்தால் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய படமாக இருந்திருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறினார். கோலிவுட் திரையுலகை தாண்டி இப்படம், வெளிநாட்டு ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த விஷத்தில் அஜித் சூப்பர்! விஜய் ரொம்ப மோசம்? பரபரப்பை ஏற்படுத்திய 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகர் மாரிமுத்து

கதாநாயகனை தொடர்ந்து இப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரபலம் என்றால் அது ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பசுபதி கேரக்டர் தான். பாக்சிங் வாத்தியாராக நடித்திருந்த இவருடைய நடிப்பும் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. மேலும் வேம்புலிங்காக நடித்திருந்த ஜான் கோகென், டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சபீர் கல்லறைகள், மாரியம்மாள் கதாபாத்திரம் நடித்திருந்த தூஷரா விஜயன், பாக்கியம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனுப்புமா குமார், வெற்றிச்செல்வனாக நடித்திருந்தார் கலையரசன், ராமன் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், என ஒவ்வொரு கதாபாத்திரமும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இயக்குனர் ரஞ்சித் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகை அனிக்காவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர்.. வீங்கிய முகத்துடன் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்!

சற்று முன்னர் இப்படம் குறித்து ஆர்யா போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். ' மேட்ச் பார்க்க ரெடியா? ரோசமான ஆங்கில குத்துச்சண்டை என பதிவிட்டுள்ளா.ர் இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இப்படத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். சார்பட்டா 2' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரோடக்ஷன் மூலம் இயக்கி, தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!

Scroll to load tweet…