அந்த விஷத்தில் அஜித் சூப்பர்! விஜய் ரொம்ப மோசம்? பரபரப்பை ஏற்படுத்திய 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகர் மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலில் முரட்டு வில்லனாக நடித்து வரும் நடிகரும், இயக்குனருமான, மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் குறித்து கூறியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும் மாரிமுத்து.. தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆணாதிக்கம் கொண்ட நபராக இருக்கும் இவருக்கு எதிராக, கதாநாயகி சுயமரியாதைக்காக போராடி வருவதை, மிகவும் பரபரப்பான மற்றும்.. விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறி வருகிறார் இயக்குனர் திருச்செல்வம்.
இந்நிலையில் நடிகர் மாரிமுத்து, சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றில் கொடுத்துள்ள பேட்டியில் அஜித் மற்றும் பேசியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அஜித்தை பற்றி கூறியுள்ள மாரிமுத்து, அஜித் யாராவது தனக்கு ஏதாவது செய்தால்.. அது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், ஒரு நிமிடத்தில் மறந்து விடுவார். அது அவரிடம் உள்ள சிறந்த குணம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் விஜய் பற்றி பேசும்போது, விஜய் அப்படி இல்லை.. அவருக்கு ஏதாவது ஒன்று எதிர்மறையாக நடந்தால் எவ்வளவு நாள் ஆனாலும் அதை மறக்கவே மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட எது நடந்தாலும் நினைவில் வைத்துக் கொண்டு, ஓரிருநாளில் அதை அப்படியே டபுள் மடங்காக திருப்பிக் கொடுத்து விடுவார். அது விஜய் இடம் உள்ள மோசமான குணம் என்பது போல் விமர்சித்துள்ளார். இந்த கருத்து தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.