Breaking: அஜித் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சுற்று பயணத்திற்கு.. என்ன பெயர் தெரியுமா?
அஜித் விரைவில் தன்னுடைய 2-ஆவது சுற்று, உலக மோட்டார் சுற்று பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ள நிலையில், இதற்க்கு வைத்துள்ள பெயரையும் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியான, 'துணிவு' திரைப்படம் வெற்றிகரமாக 300 கோடியை கடந்து சாதனை படைத்ததோடு, அஜித்தின் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால், ஒரு சில திரையரங்குகளில் 50 ஆவது நாள் வெற்றி விழாவையும் கொண்டாடியது. 'துணிவு' படத்தின் வெற்றியை தொடர்ந்து, லைகா தயாரிப்பில் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் அஜித்.
தன்னுடைய 62 ஆவது படத்தை அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அதிகார பூர்வ தகவல் வெளியான நிலையில், பின்னர்... அஜித்துக்கும் - லைகா நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவனின் கதையில் திருப்தி ஏற்படாததால், AK 62 படத்தை இயக்கும் வாய்ப்பு தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனிக்கு சென்றது. இந்த படத்தின் பூஜை எளிமையாக போட்டு முடிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!
மேலும் அஜித் எந்த அளவிற்கு தன்னுடைய பட பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறாரோ.. அதே அளவிற்கு, பைக் ரெய்டு செல்வத்திலும் கடந்த ஓராண்டாக தீவிரம் காட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. வலிமை மற்றும் துணிவு படப்பிடிப்புக்கு இடையே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாட்டிலும், இந்தியாவிலும் பைக் ரெய்டு சென்றார். அப்போது பல ரசிகர்கள் இவரை சந்தித்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்டனர். தன்னுடைய முதல் கட்ட பைக் பயணத்தில் இந்தியா முழுவதையும் சுற்றி முடித்துவிட்டதாக அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்ட பயணத்தை அஜித் விரைவில் துவங்குவர் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது." என தெரிவித்துள்ளார். எனவே அஜித்து கூடிய விரைவில் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு தன்னுடைய இரண்டாம் கட்ட உலகம் சுற்று பயணத்தை, வெளிநாட்டில் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை படு குஷியாக்கியுள்ளது.