நடிகர் ஆர்யா, மற்றும் சாயிஷா இந்த கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நிலையில், இன்று அவர்கள் தங்களுடைய முதல் வருட திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதுகுறித்து நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா மிகவும் உருக்கமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, 'கஜினிகாத்'  படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.

ஹைதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'காப்பான்' படத்தில் இணைந்து நடித்த நிலையில், தற்போது 'டெடி' படத்தில் நடித்துள்ளனர்.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சாயிஷா தங்களுடைய முதல் திருமண ஆண்டு பற்றி மிகவும் உருக்கமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில்... "இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், முடிந்தவரை எல்லா வழிகளிலும் என்னை நிறைவு செய்த மனிதர் நீங்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம், தோழமை என அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைத்தது நான் உன்னை நேசிக்கிறேன். என கூறியுள்ளார்.