Asianet News TamilAsianet News Tamil

"அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு" போன்ற வசனங்கள் அவசியம்! ஆர்யா பேட்டி

காதர் பாட்ஷாவும், என்ற முத்துராமலிங்கம்" படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கோவை வந்த ஆர்யாமற்றும் நடிகை சித்தி இத்நானி ஆகியோர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தனர்.
 

Arya about Kathar Basha Endra Muthuramalingam movie dialogues
Author
First Published May 28, 2023, 9:46 PM IST

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள "காதர் பாட்ஷாவும், என்ற முத்துராமலிங்கம்"  திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி, வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நடிகர்களான ஆர்யா மற்றும் சித்தி இத்நானி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசினர். 

அப்போது பேசிய ஆர்யா, மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா அவர் பாணியில் கூறியிருக்கிறார் எனவும் இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம் என தெரிவத்தார். படத்தில் வைக்கபட்டுளள "அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு" என்ற வசனம் தொடர்பான கேள்விக்கு நல்லிணம் இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும், அதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை என தான் நினைப்பதாகவும், படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும் என தெரிவித்தார். 

குழந்தை பிறக்க போகும் ராசி.! தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ராம் சரண்... ஹீரோ யார் தெரியுமா?

Arya about Kathar Basha Endra Muthuramalingam movie dialogues

இந்த படத்தில் இடம்பெறும் ரஜினி காந்த் தொடர்பான போஸ்டர் மற்றும் பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் படத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை என தெரிவித்த ஆர்யா, தனக்கு கிராமத்தில் ஆக்சன் போன்ற திரைபடம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை எனவும், அதனால் தான் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை தனக்காக உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் இசை இந்த படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஆர்யா ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். கிராமத்து படங்கள் நடிக்காதது  பான் இந்தியா படம் இல்லை என்பதற்கான இல்லை, காந்தாரா படம் கூட கிராமத்தில் தான் எடுத்தார்கள். 

சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? விளக்கம் கொடுத்த வி.ஜே.ரவி.. வரிந்து கட்டிய சக நடிகை! செம்ம ட்விஸ்ட்!

பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான் எனவும் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் போது பல மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள், அப்போது அதில் கிடைக்கும் வரைவேற்பை பொறுத்து அது பேன் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது எனவும், அடுத்து எப்.ஐ. ஆர்  திரைப்படத்தின் இயக்குனரிடம் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிரப்பதாகவும், சார்பட்டா 2 திரைப்படத்திற்கான கதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் படபிடிப்பு துவங்கும் எனவும் தெரிவித்தார்.

Arya about Kathar Basha Endra Muthuramalingam movie dialogues

மேலும் இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிதான் வெற்றி பெறும் என அப்போது நடிகர் ஆர்யா தெரிவித்தார் இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சித்தி இத்நானி, இந்த திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கனமான,முக்கியாமன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமைக்குரியது எனவும் தெரிவித்தர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios