Arulnithi : முரட்டு மீசையுடன் மாஸ் லுக்கில் மிரட்டும் அருள்நிதி... யார் படத்துக்காக இந்த கெட்-அப் தெரியுமா?
Arulnithi new movie : வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது டைரி, டி பிளாக், தேஜாவு போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருள்நிதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனான இவர், பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து மெளனகுரு, டிமாண்டி காலனி, இறவுக்கு ஆயிரம் கண்கள், கே 13 என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த இவர் தற்போது டைரி, டி பிளாக், தேஜாவு போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதுதவிர டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அஜய் ஞானமுத்து கவனிப்பதோடு இப்படத்தை தயாரிக்கவும் உள்ளார். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வேணுகோபால் என்பவர் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், அருள்நிதி நடிக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜோதிகா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ராட்சசி படத்தை இயக்கிய கவுதம் ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அருள்நிதி. இப்படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட ஹீரோயின் துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு டி இமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இது கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளது. இப்படத்துக்காக முரட்டு மீசையுடன் நடிகர் அருள்நிதி வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Sundar C : பிரபல நிகழ்ச்சியின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைத்த சுந்தர் சி... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்