உதயநிதி, தயாநிதி உடன் பிரதர்ஸ் டே கொண்டாடிய அருள்நிதி... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் அருள்நிதி தனது சகோதரர்கள் உதயநிதி மற்றும் தயாநிதி உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பிரதர்ஸ் டே வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
கலைஞர் கருணாநிதி அரசியலைப் போல் சினிமாவிலும் பெரும்பங்காற்றி இருந்தார். அவரது காலத்தில் தொடங்கி தற்போது வரை அவரது குடும்பத்தின் பங்களிப்பு சினிமாவில் இருந்த வண்ணம் உள்ளது. தற்போது கருணாநிதியின் பேரன்களான உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி ஆகியோர் சினிமாவில் தயாரிப்பாளர்களாக ஜொலித்து வருகின்றனர். அதேபோல் அவரது மற்றொரு பேரனான அருள்நிதி சினிமாவில் நடிகராக ஜொலித்து வருகிறார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் மட்டும் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் அமைச்சராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறார். அவர் சென்னை அணியின் தீவிர ரசிகர் என்பதால் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... கண்ணுக்கு கண்ணாக.. உடன் பயணிக்கும் சகோதர்களை கொண்டாடும் தினம் இன்று!!
அந்த வகையில் நேற்று சென்னை - குஜராத் அணிகள் மோதிய பிளே ஆஃப் சுற்று போட்டியையும் கண்டுகளித்தார் உதயநிதி. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சென்னை அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 10-வது முறை ஆகும்.
சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியை உதயநிதி தனது சகோதரர்களான அருள்நிதி மற்றும் தயாநிதி உடன் கண்டு களித்துள்ளார். அவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அருள்நிதி, தன் சகோதரர்களுக்கு பிரதர்ஸ் டே வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். சகோதரர்களின் முக்கியத்துவத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 24-ந் தேதி பிரதர்ஸ் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் இயக்க உள்ள பிரம்மாண்ட படம்... அதில் இத்தனை நடிகர்களா! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே