National Brother's Day: சகோதரர்களின் முக்கியத்துவத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

வாழ்க்கையில் சகோதரனின் முக்கியத்துவத்தையும், அவர்களின் பங்களிப்பையும் நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 24ஆம் தேதி அன்று "தேசிய சகோதரர்கள் தினம்" கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் நமக்கு கிடைத்த ஆசீர்வாதம். சகோதரர்களுடன் கொண்டுள்ள பிணைப்பு பிரிக்க முடியாதது.

ஒருவரின் வாழ்வில் சகோதரனின் இடத்தை எதுவும் நிகர் செய்ய முடியாது. உங்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மிகப்பெரிய ஆதரவு அமைப்பு, சகோதரனின் பந்தம். யாராலும் உங்களை புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர்கள் உங்களை புரிந்துகொள்கிறார்கள். தோள் கொடுக்க வேண்டிய நேரத்தில் தோழனாக வந்து நிற்பார்கள். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பொதுவெளியில், சொந்த பந்தங்களுக்கு மத்தியில் உங்களை விட்டு கொடுக்காதவர்கள் சகோதரர்கள். வாழ்வில் ஏற்படும் நெருக்கடி, தனிமையின் போது சகோதரன் உடனிருப்பது மிகப் பெரிய உத்வேகமாக இருக்கும்.

எப்படி கொண்டாடலாம்? 

நீங்கள் ஒரே ஊரில் வசிக்கிறீர்கள் என்றால், உங்களுடைய சகோதரருக்கு பழைய நினைவுகளை நினைவூட்டும் ஒரு சிறிய பரிசுடன் அவரைச் சந்தியுங்கள். நிறைய பேசுங்கள். ஒருவேளை நீங்கள் வெவ்வேறு ஊரில் வசித்தால் உங்கள் சகோதரருடன் தொலைபேசியில் உரையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்து மனதிற்கு நெருக்கமான நினைவுகளை நினைவுபடுத்துங்கள். ஒன்றாக இணைந்து உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சகோதரர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்? 

தேசிய சகோதரர்கள் தினம் உங்கள் சகோதரர்களைக் கொண்டாடுவதற்கும், அபரிமிதமான அன்புடனும் அக்கறையுடனும் அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கும் சிறந்த நாள். இந்த நன்னாளில் உங்களுடைய சகோதரருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில அழகான வாழ்த்துகளை இங்கு காணலாம்.

சகோதர்கள் தின வாழ்த்துகள்!! 

  • என் அருமை சகோ! நீ என்னுடன் இருந்தால் அதுவே எனக்கு பெரும்பலம். எப்போதும் உடனிரு. இனிய சகோதர தின வாழ்த்துக்கள்! 
  • சகோதரன் என்பவன் கடவுளின் பரிசு. இனிய சகோதர தின வாழ்த்துக்கள்!! 
  • உலகின் சிறந்த சகோதரருக்கு சகோதர தின வாழ்த்துக்கள்.. 
  • சகோதரர்கள் என்பவர்கள் சிறந்த நண்பர்கள். எனது சிறந்த நண்பனுக்கு சகோதர தின வாழ்த்துக்கள். 
  • என்னுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி! இனிய சகோதர தின வாழ்த்துக்கள். 
  • வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், மனதளவில் ஒன்றுபட்டுள்ளோம். எப்போதும் அக்கறை கொண்ட சகோதரருக்கு இதயம் கனிந்த சகோதரர்கள் தின வாழ்த்துக்கள்.
  • ஒரு சகோதரனைப் போல "நண்பர் இல்லை". சகோதர தின வாழ்த்துக்கள்! 

இதையும் படிங்க: மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!