- Home
- Cinema
- ரூ.100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் இயக்க உள்ள பிரம்மாண்ட படம்... அதில் இத்தனை நடிகர்களா! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே
ரூ.100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் இயக்க உள்ள பிரம்மாண்ட படம்... அதில் இத்தனை நடிகர்களா! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள டி50 படம் குறித்த மாஸான அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.
கேப்டன் மில்லர் படத்துக்கு பின்னர் நடிகர் தனுஷ் தனது 50-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்படத்தை தனுஷ் தான் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கிய பொன்னியின் செல்வன் 2… தமிழ்நாட்டில் மொத்தமே இவ்ளோதான் வசூலா?
தனுஷின் 50-வது படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதன்படி விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யாவும், மாநகரம் பட நடிகர் சந்தீப் கிஷான் ஆகியோர் இப்படத்தில் நடிகர் தனுஷின் சகோதரர்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷும், சந்தீப் கிஷனும் தற்போது கேப்டன் மில்லர் படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர். தனுஷின் 50-வது படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம். வட சென்னையை மையமாக வைத்து தான் இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளாராம் தனுஷ். இதனால் இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... டிரெஸ்ஸை கழட்டி உள்ளாடையை காட்ட சொன்ன இயக்குனர்... தரமான பதிலடி கொடுத்த பிரியங்கா சோப்ரா