'மொழி', 'அபியும் நானும்' போன்ற தரமான படங்களை இயக்கி ரசிகர்களில் கண்களுக்கு விருந்து கொடுத்தவர் இயக்குனர் ராதாமோகன். இவர் அடுத்ததாக அருள்நிதி நடிக்கும் 'பிருந்தாவனம்' என்கிற படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் அருள்நிதி காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே ராதாமோகன் இயக்கிய 'மொழி' படத்தில் இதேபோன்ற ஒரு கேரக்டரில்தான் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா நடித்த அதே கேரக்டரில் அருள்நிதியும் நடிப்பதால் இந்த படம், மொழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என்ற கருத்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இதை இயக்குனர் தரப்பு உறுதி செய்யவில்லை.
இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், கதாநாயகியாக பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்த ழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடிக்கிறார்.
