arthi Betrayed for vijay tv

பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆர்த்தி. கடந்த சில வருடங்களாக 'ஜாங்கிரி மதுமிதா', 'விதியுலேகா' ஆகிய காமெடி நடிகைகளின் வரவேற்பால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க சரியாக வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின் அவரை அந்த தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது. ஆனால் தற்போது மீண்டும் இந்தத் தொலைக்காட்சி, 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சிக்கு இவரை நடுவராக அழைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஆர்த்தி இவர்களிடம் ஒரு சில காரணங்களைக் கூறி விட்டு தற்போது மற்றொரு தொலைக்காட்சி நடத்தி வரும் 'ஸ்டார் வார்ஸ்' நிகழ்ச்சியில் நடுவராக மாறியுள்ளார். இதனால் நேரடியாகக் கூறாமல் இப்படி துரோகம் செய்து விட்டார் ஆர்த்தி என இவர் மீது செம கடுப்பில் உள்ளதாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனம்.