இதே ஜனவரி 6 தேதி, 1966ம் ஆண்டு சென்னை உதித்த இசை மகன் ஏ.ஆர்.ரகுமான், 1992 ஆம் ஆண்டு  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா  திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மேலும் இந்தி , தமிழ், ஆங்கிலம்  மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என பலராலும் பெருமையோடு அழைக்கப்படுகிறார்.

ஆஸ்கார் விருது , கோல்டன் குளோப் விருது  , பாப்டா விருது  , தேசிய திரைப்பட விருது  போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற இவர்  ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர்  என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக  ஆஸ்கார் விருது  வென்றிருக்கிறார்

இவர் பெற்ற ஆஸ்கார் விருது இந்திய திரையுலகினர்களுக்கு பல ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில் ஒரே ஆண்டில் ஒன்றில்லை இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று.

100 கோடி இந்தியர்கள் மனதிலும் ஒரே நிமிடத்தில் இடம் பெற்றவர் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் மயங்காத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது.

மேலும்  இத்திரைப்பட இசைக்காக இவருக்கு  2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரையுலக இசையில் சரித்திர சாதனை படைத்த ஏ.அர்.ரகுமானுக்கு இன்று தனது 5௦ வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அவருக்கு  நியூஸ் பாஸ்ட் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் பெருமை அடைகிறோம்.

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இனிய பிறந்த நாளில் அவரை பற்றிய ஒருசில நினைவுகளை உங்களுடன் பகிர்கிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அதிகம் பேசமாட்டார். ஆனால் அவ்ரது இசை அவரை விட பல மடங்கு பேசும்.

பொது நிகழ்ச்சியின்போது எத்தனை பேர் ஆட்டோகிராப் கேட்டாலும் சலிக்காமல், எவ்வளவு நேரமானாலும் ஆட்டோகிராப் போட்டு கொடுப்பார். ஆனால் மசூதியில் யார் கேட்டாலும் ஆட்டோகிராப் போடமாட்டாராம். மசூதியில் ஆண்டவன் மட்டுமே பெரியவர் என்று கூறி அமைதியாக சென்றுவிடுவாராம்

நடிப்பதில் ரஹ்மானுக்கு சிறிதும் ஆர்வம் இல்லை. காரணம் அவரது கூச்ச சுபாவம்தான். ஜெய்ஹோ பாடலுக்கு ரஹ்மானை நடிக்க வைக்க பரத்பாலா பெரும்பாடு பட்டாராம்.

ரஹ்மான் ஒரு கார் பிரியர். வேகமாக கார் ஓட்டுவதில் வல்லவராம். அவருடன் காரில் செல்பவர்கள் அவரது வேகத்தை பார்த்து பயப்படுவார்களாம். ஆனால் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் சாலை விதிகளை மதிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிரத்னம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானைச் சந்திக்க முடியும். தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற வகையில் அவருக்கு ரஹ்மான் அதிக மரியாதை கொடுப்பாராம்.

ரஹ்மான் திறமையாக மிமிக்ரி செய்பவர் என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாக கவியரசு வைரமுத்து குரலை மிகவும் அற்புதமாக மிமிக்ரி செய்வாராம்

இவருக்கும் இவரது மகன் அமீனுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று ரஹ்மானின் மகன் அமீனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து கூறுங்கள்.