நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அர்ஜுன் தொகுத்து வழங்கிய, 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாகமாறியது . இதை தொடர்ந்து இரு வீட்டு பெற்றோரும் , இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட தை மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக, சமீபத்தில் தம்பி ராமையா தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இவர்கள் இருவரின், திருமண நிச்சயதார்த்தம் விரைவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறஉள்ளதாக , தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. 

Thangalaan: 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதியுடன்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இன்பஅதிர்ச்சி கொடுத்த படக்குழு

தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இருவீட்டு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் என்றும் அதில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ஆனியன் பிங்க் நிற பட்டு சேலையில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார். உமாபதி ஐஷுக்கு மேட்சிங்கா உடை அணிந்துள்ளார். 

வைரலாகும் வீடியோ இதோ..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

View post on Instagram