தளபதி விஜய் 'பிகில்' படத்தை தொடர்ந்து, தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தளபதி 64 ' இன்னும் பெயரிடாத இந்த படத்தின் டைட்டில், என்னவாக இருக்கும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஏக்கத்தோடு கார்த்திருக்கிறார்கள் என்றால், பிரபலங்கள் அவர்களையே மிஞ்சி விடுவார்கள் போல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில், தளபதி கடைசியாக நடித்த 'பிகில்' படத்தின் தயாரிப்பாளரான, அர்ச்சனா கல்பாத்தி, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என, ஏக்கத்தோடு ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

இவரின் இந்த ட்விட், அர்ச்சனா எந்த அளவிற்கு விஜயின் தீவிர ரசிகை என்பதை காட்டுகிறது. 

'தளபதி 64 ' ஆவது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிக்கப்பட்ட பின், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அதை தொடர்ந்து மீண்டும் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து படக்குழுவினர் கர்நாடக செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில், நடிகை மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…