aravindsamy basker oru raskal movie relese date changed
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.தற்போது இந்த படத்தின் வெளீயீட்டு தேதி திடீர் என மாற்றப்பட்டு உள்ளது.
"அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் "திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட "பாஸ்கர் ஒரு ராஸ்கல் " திரைப்படம் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாகவும் , எல்லா பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்படத்தினை மே மாதம் 11 ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர் .
இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:17 AM IST