தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் ஆதரவாளர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது சமூக வலைத்தளத்தில் "கடந்த 48 மணி நேரமாக, எம்.எல்.ஏக்களை கிண்டல் மற்றும் நையாண்டி செய்தும், தொலைபேசியில் அழைத்து துன்புறுத்துவதும் நியாயமானதா? எங்கள் சுதந்திரத்துக்கான உரிமை எங்களிடம் உள்ளது" என்று பதிவு செய்துள்ளார். 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் அரவிந்த்சாமி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார், "இந்த மாதிரியான தருணங்களில் மக்கள் கண்டிப்பாக அவர்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அது அவர்களுடைய உரிமை என்று கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பது போல் நீங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது . அது எப்படி பட்ட கருத்தாக இருந்தாலும் சரி" என பதிலளித்துள்ளார்.