இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தனி ஒருவன்' படத்தில், தனித்துவமான வில்லனாக ரீ - என்ட்ரி கொடுத்தவர் அரவிந்த் சாமி.

இந்த படத்தில், ஹீரோ ஜெயம் ரவியையே நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விட்டார் அரவிந்த்சாமி.  இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான 'போகன்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை. எனினும் இவர்கள் மீண்டும் தனி ஒருவன் 2 படத்திற்காக விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தனி ஒருவன் படத்தில், அரவிந்த் சாமியின் நடிப்பை பார்த்து அசந்த, கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்த, இயக்குனர் நாக் அஷ்வின் அடுத்ததாக தான் இயக்க உள்ள படத்தில், அரவிந்த் சாமியை கமிட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: கதறும் பத்திரிக்கையாளர்... உடலை எடுத்து செல்ல உதவி செய்யுங்கள் கேரள முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!
 

'மகாநடி' படத்திற்கு பின் இதுவரை எந்த படங்களையும் இயக்காமல் இருந்த இவர், தற்போது.. இயக்குனர் பிரபாஸ் 'சாஹே' படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடந்துதன்னுடைய 21 ஆவது படத்தை நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சயின்டிஃபிக் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. மேலும்  தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: குழந்தை முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சஞ்சீவ் - ஆலியா... வைரலாகும் குட்டி பப்பு க்யூட் கிளிக்...
 

அந்த வகையில், இந்த படத்தில் நடிக்க வைக்க மிகவும் ஸ்டைலிஷ் வில்லனை தேடி வந்த நாக் அஸ்வின், தனி ஒருவன் படத்தில், அரவிந்த் சாமியின் நடிப்பை பார்த்து வியர்ந்து. தன்னுடைய படத்தில் கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும், இந்த படம் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.