கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பலருக்கு, அடுத்தடுத்து பல உதவிகளை செய்து வருபவர், பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ். இதை தொடர்ந்து, தற்போது பத்திரிக்கையாளர் ஒருவருக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.  

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பலருக்கு, அடுத்தடுத்து பல உதவிகளை செய்து வருபவர், பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ். இதை தொடர்ந்து, தற்போது பத்திரிக்கையாளர் ஒருவருக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது... மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள்... 

கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களை சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும் பெருமையாக கருதுகிறேன்.

மேலும் செய்திகள்: அழகில் நடிகைகளை மிஞ்சும் மனைவி... தேவதை போல் கியூட் குழந்தை..! துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள்!

ஒரு சிறிய வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறேன். திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தமிழகத்தில் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும்... 

கொரோனாவால் அவரால் மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார். அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்களின் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்ந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன்... ஒரு சிறிய வேண்டுகோளாக அவரது தாயாரின் உடலை மருத்துவமனையிலிருந்து தமிழகம் எடுத்துச்செல்ல உடனடியாக தாங்கள் அனுமதிக்க வேண்டும்... 

மேலும் செய்திகள்: கொசுவலை போல் ஆடை... முன்னழகில் ஹாட்..! குட்டி உடையில் வெறித்தன போஸ் கொடுத்த யாஷிகா!

அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்... நன்றி!! என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலர் லாரன்ஸின் செயலை மனதார பாராட்டி வருகிறார்கள்.