பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதிலும் பலர் பிக் பாஸ் டைட்டில் வென்ற ஆரவை கமிட் செய்ய அவரிடம் கதை கூறி வருகின்றனர். 

சமீபத்தில் கூட ஹரிஷ் கல்யாண் மற்றும்  ரைசா இணைந்த கிரகணம் படத்தின்  இயக்குனர் இளன் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர் என அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.  இந்தப் படத்தின் கதையை முதலில் இயக்குனர் ஆரவிடம் தான் கூறினாராம், ஆனால் சம்பளம் பத்தாது என தொடர்ந்து ஆரவ் அடம்பிடிக்க படக்குழு ஆரவை கழட்டி விட்டு ... ஹரிஷ் கல்யாணிடம் இந்தக் கதையைக் கூறி அவரையே கமிட் செய்து விட்டது. 

ஆரவ் மற்றும் ரைசா நடிக்க இருந்த இந்தப் படத்தில் தற்போது ஹரிஷ் மற்றும் ரைசா நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.