பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் பறவைகளாக சுதந்திரமாக சுற்றி வந்த ஆரவ், மற்றும் ஓவியா இடையே தற்போது புது பிரச்சனை வெடித்துள்ளது. 

ஓவியாவை பலர் ஒதுக்கியபோதும், அவருக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்தவர் ஆரவ் தான். இதனால் அன்புக்கு ஏங்கி வந்த ஓவியா மீண்டும் ஆரவ் காதலில் விழுந்தார்.

கடந்த வாரம் முதல் இவர்களுடைய காதல் நல்ல முறையில் தான் போய் கொண்டு இருந்ததது. தற்போது திடீர் என ஆரவிற்கு என்ன நடந்தது என தெரியவில்லை. ஓவியா வெளியேற்ற பட வேண்டும் என கூறி அவருடைய பெயரை நாமினேட் செய்தார்.

இதனை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ஒரு பிரோமோவில்... அனைவரும் அமர்ந்திருக்கும் போது, உன்னிடம் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என கூறுகிறார். அதற்கு ஆரவ் ஓவியாவை தள்ளி விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார்.

இதனை தொடர்ந்து ஓவியா நீ என்ன ஏமாத்திரியா என கூறி கதறி அழ தொடங்கிவிட்டார். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பிந்து.. ஓவியா இதெல்லாம் உனக்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்