Asianet News TamilAsianet News Tamil

மாட்டோடு கணவரை வைத்து கலாய்த்த அறந்தாங்கி நிஷா..பொங்கல் அலப்பறைகள்..

எவ்வளவு தான் சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்துடனும் நேரம் செலவழிக்க தவறாத அறந்தாங்கி நிஷா சமீபத்தில் கணவருடன் பொங்கல் கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 

Aranthangi Nisha pongal video..
Author
Chennai, First Published Jan 16, 2022, 7:54 PM IST

எதிலும் சாதிக்க திறமை இருந்தால் போதும், அழகு ஒரு பொருட்டே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து, பலருக்கு எடுத்து காட்டாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி திறமையை நிரூபிக்க, கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை வாயிக்கு வந்த படி பேசினாலும், அவர்கள் அனைவரும் அறந்தாங்கி நிஷாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவது தான் இவருடைய மிகப்பெரிய வெற்றி.

 அதே நேரத்தில், வளர்ந்து வரும் நேரத்தில் குழந்தை பெற்று கொண்டால் தன்னுடைய கேரியர் பாதித்துவிடும் என என்னும் பலருக்கு இவர் சிறந்த உதாரணம். இவர் கர்ப்பமாக இருக்கும் போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை தன்னுடைய சவாலாகவே ஏற்று, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி, அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

 Aranthangi Nisha pongal video..
விஜய் டிவியால் கிடைத்த பிரபலம், இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்த்தி சென்றது. ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் மூலம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி, மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார்.

எவ்வளவு தான் சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்துடனும் நேரம் செலவழிக்க தவறாத அறந்தாங்கி நிஷா சமீபத்தில் கணவருடன் பொங்கல் கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios