பிக்பாஸ் வீட்டில் முதன் முறையாக ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று நிஷா வெளியேறினார். நேற்றைய நிகழ்ச்சியில்சோம் சேகர், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ஷிவானி, அறந்தாங்கி நிஷா ஆகிய 5 பேரையும் ஒன்றாக அமர வைத்த கமல், ஒவ்வொரு போட்டியாளர்களாக காப்பற்றப்பட்டதாக அறிவித்தார். இறுதியாக நிஷா வெளியேற்றப்படுவதையும் அறிவித்தார். 

 

இதையும் படிங்க: தலைவருடன் நடிக்க தனி விமானத்தில் பறந்த நயன்தாரா... கிழிந்த பேண்ட்,கூலிங் கிளாஸுடன் கெத்தாக சூப்பர் ஸ்டார்...!

இதையடுத்து அர்ச்சனாவின் கண்ணீரோடும், அன்பு கேங்கை பிரியும் சோகத்தோடும் பிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெற்றார் நிஷா. அங்கிருந்து நேராக அறந்தாங்கி இல்லத்திற்கு சென்ற நிஷாவிற்கு அவருடைய குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 70 நாட்களுக்குப் பிறகு  வீட்டிற்கு திரும்பிய மகிழ்ச்சி நிஷாவின் முகத்தில் தெரிகிறது. தனக்காக வாசலிலேயே காத்திருந்த செல்ல மகனை கட்டி அணைந்து முத்த மழை பொழிகிறார். மகனும் அன்போடு அம்மாவிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். 

 

இதையும் படிங்க: விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...!

அதேபோல் Welcome to Arandhangi Home Love You என எழுதப்பட்ட கேக்கை வெட்டி குடும்பத்தினர் அனைவரும் நிஷாவை செம்ம தடபுடலாக வரவேற்று இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...