கடந்த இரண்டு தினங்களை சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட ஒரு பதிவை தான் பலர் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். 

கடந்த இரண்டு தினங்களை சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட ஒரு பதிவை தான் பலர் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதற்கு காரணம்... அவர் எப்போதும் திறமைக்கு மதிப்பு கொடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்தது தான் காரணம். 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்த பெண் பேபி. இவர், அப்பகுதி அவ்வப்போது தனக்கு தோன்றும் பாடல்களை எல்லாம் பாடி வந்துள்ளார். இவரின் இனிமையான குரலுக்கு அந்த கிராமத்தில் உள்ள பலர் அடிமையும் கூட. அந்த வகையில் இவர் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த 'என்னவளே' பாடலை தெலுங்கில் பாடியுள்ளார்.

அப்போது பேபி பாடிய பாடலை ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய முகநூல் பக்கத்தில் இதனை பதிவு செய்தார். இதனால் பேபியின் பாடல் மேலும் பிரபலமானது.

தற்போது அவர் பாடுவதை பார்த்த தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்து பெண்ணின் வாழ்வில் அதிர்ஷம் தேடி வந்துள்ளது.

விரைவில் இந்த பெண் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கூட வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்... இது உண்மையாகுமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.