இருகையிலும் ஆஸ்கர் விருதுகளை தாங்கி ஓட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். தென்னிந்திய திரையுலகை கடந்து இந்தியில் மட்டுமில்லாது ஹாலிவுட்  வரை தனது பெயரை பதிவு செய்த பெருமை ஏ.ஆர்.ரகுமானையே சாரும். அப்படிப்பட்ட புகழுக்கு எல்லாம் சொந்தக்காரரான ஏ.ஆர்.ரகுமானின் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஏ.ஆர்.ரகுமானின் இசை திறமைகளை கண்டறிந்து அவருக்கு 9ம் வகுப்பு முதலே அதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தவர் அவருடைய அம்மா கரீமா பேகம். ஏ.ஆர்.ரகுமானுக்கு எப்போதும் அவருடைய அம்மா மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் உண்டு. பல பேட்டிகளில் கூட தன்னுடைய திறமையை கண்டறிந்து வளர்ந்தவர் என்ற பெருமை தன் தாயையே சாரும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கரீமா பேகம் இன்று காலமானார். ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மரணமடைந்த செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சியுடன் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.