துபாயில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையில் பங்கெடுத்துக் கொண்ட ஏ.ஆர்.ரகுமான், அங்குள்ள இசைக் கலைஞர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப், கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை, ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் அயலான் மற்றும் லால் சலாம் ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளன.

இப்படி சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக துபாய் சென்றிருந்த ஏ.ஆர்.ரகுமான், அங்கு ஹரே கிருஷ்ண கீர்த்தனையில் பங்கெடுத்துக் கொண்டு அங்குள்ள இசைக் கலைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த கீர்த்தனையின் போது அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து அமர்ந்தபடி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதோடு அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இந்த கீர்த்தனை சர்ப்ரைஸாக இருந்ததாகவும், அதை அன்போடு நடத்தியவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், மதங்களை கடந்து இசையால் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதை பர்க்கும்போது அருமையாக உள்ளது என பாராட்டி கமெண்ட் செய்து வருவதோடு, அந்த கலைஞர்கள் உடன் சேர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசை ஆல்பம் தயார் செய்ய வேண்டும் என வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.

View post on Instagram

இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் கேரக்டரை மிஸ் பண்ண நடிகரை ‘தலைவர் 171’ல் ரஜினிக்கு வில்லனாக்கும் லோகேஷ் கனகராஜ்..!