கிருஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள காட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Ghaati Movie Release Date : அனுஷ்கா ஷெட்டி தற்போது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தற்போது 'காட்டி' படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார். இந்த படத்தில், அனுஷ்காவை முற்றிலும் புதிய தோற்றத்தில் காணலாம். ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸில், அவர் எதிரிகளை அழிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புல்லரிக்கும் அனுபவத்தை அளித்தது.

அனுஷ்கா ஷெட்டியின் 'காட்டி' படத்தின் வெளியீட்டு தேதி

க்ளிம்ப்ஸ் வீடியோ 'காட்டி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. க்ளிம்ப்ஸே இவ்வளவு அழுத்தமாக இருந்தால், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. படக்குழு சமீபத்தில் வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஜூலை 11 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ் ஜாகர்லமுடி இயக்கும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் வழங்க, ஃபர்ஸ்ட் ஃப்ரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராஜீவ் ரெட்டி மற்றும் சாய்பாபு ஜாகர்லமுடி இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு நதியைக் கடந்து செல்வது போன்ற புகைப்படம், இடம்பெற்றுள்ளது.

'வேதம்' படத்திற்குப் பிறகு அனுஷ்கா ஷெட்டி மற்றும் இயக்குனர் கிருஷ் ஆகியோர் இணைந்துள்ளதால் காட்டி திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. அனுஷ்கா, யுவி கிரியேஷன்ஸுடன் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றுவது கூடுதல் சிறப்பு. இந்த படத்தில் சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றுகின்றனர். மனோஜ் ரெட்டி காட்டாசனி ஒளிப்பதிவு செய்கிறார், நாகாவேலி வித்யாசாகர் இசையமைக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்குநராகவும், சாணக்யா ரெட்டி தூருபு மற்றும் வெங்கட் என் சுவாமி ஆகியோர் படத்தொகுப்பாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். சாய் மாதவ் பூர்ரா வசனம் எழுதியுள்ளார். 'காட்டி' படம் ஜூலை 11 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.