MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கையில் சுருட்டு.. முகத்தில் ரத்தம்.. பார்வையால் மிரட்டும் அனுஷ்கா ஷெட்டியின் 'Ghaati' பட பர்ஸ்ட் லுக்!

கையில் சுருட்டு.. முகத்தில் ரத்தம்.. பார்வையால் மிரட்டும் அனுஷ்கா ஷெட்டியின் 'Ghaati' பட பர்ஸ்ட் லுக்!

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி உள்ள 'Ghaati' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தற்போது வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 07 2024, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anushka Shetty Movie

Anushka Shetty Movie

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும், விஜய், அஜித், விக்ரம், பிரபாஸ், நாகர்ஜுனா, சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. 35 வயதை கடந்த பின்னரும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி, தன்னுடைய மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 

25
Anushka shetty Birthday

Anushka shetty Birthday

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' என்கிற திரைப்படம் வெளியாகி, விமர்சன ரீதியாகவும்... வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஹீரோவை விட வயதில் மூத்த பெண்ணாக நடித்திருந்தார். மேலும் ஒரு சமையல் கலைஞராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் - அக்ஷயா திருமணத்தில்.. தன் கல்யாண ஆசையை வெளிப்படுத்திய நெப்போலியனின் 2-ஆவது மகன் குணால்!
 

35
Ghaati First look

Ghaati First look

இதை தொடர்ந்து 'Ghaati' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். யு வி கிரியேஷன்ஸ் வழங்க, ராஜு ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லாமுடி ஆகியோர் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

45
Anushka Ghaati Movie

Anushka Ghaati Movie

இந்நிலையில் இன்று நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'Ghaati'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அனுஷ்கா ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். கழுத்தில் தாலி, கையில் சுருட்டு, முகத்தில் ரத்தம் என மிகவும் வித்தியாசமான லுக்கில்... பார்வையிலேயே ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்களின் ஒருவர் தான்? தர்ஷா குப்தா பகிர்ந்த தகவல்!

55
Anushka Shocking Transformation

Anushka Shocking Transformation

 இப்படம் ஒரு ஸ்கிப்பிங் ஆக்சன் திரில்லராக உருவாக்கி வரும் நிலையில், இப்படத்தில் அனுஷ்கா முதல் முறையாக அதிரடி ஆக்சன் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கூடிய விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் பலர் இது உண்மையிலேயே அனுஷ்கா தானா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Recommended image3
விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved