Asianet News TamilAsianet News Tamil

’இப்படி ஒரு படத்தை தமிழ்சினிமா பார்த்ததில்லை’...பிரபல இந்திப்பட இயக்குநர் புகழும் அந்தப்படம் இதுதான்...

விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இந்தித்திரையுலகின் பிரபல இயக்குநரின் இயக்குநரும் முன்னணி நடிகருமான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் வியந்து பாராட்டியுள்ளார்.

anurag gashyap praises a tamil movie
Author
Chennai, First Published Mar 16, 2019, 12:53 PM IST

விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இந்தித்திரையுலகின் பிரபல இயக்குநரின் இயக்குநரும் முன்னணி நடிகருமான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் வியந்து பாராட்டியுள்ளார்.anurag gashyap praises a tamil movie

‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு  தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரிக்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் வெளியிடுகிறார்.

ஃபஹத் ஃபாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 29-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாகவும், மிஷ்கின் பூசாரியாகவும், ரம்யா கிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.anurag gashyap praises a tamil movie

இந்நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப்புக்குத் திரையிட்டு காட்டியுள்ளனர். அதனைப் பார்த்துவிட்டு, “ ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்த்தேன். அசந்துவிட்டேன். கொண்டாட நிறைய இருக்கிறது. படத்தைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் பங்கு கொள்ளாதது குறித்த எனது வருத்தம் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

குமாரராஜா, ஒரு துணிச்சலான, எந்தத் தயக்கமும் இல்லாத இயக்குநர். அவரிடம் நிறைய வித்தைகள் உள்ளன. என்னால் நிறைய சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் இப்படி ஒரு படத்தை  தமிழ்சினிமாவில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனுராக் காஷ்யப்.anurag gashyap praises a tamil movie

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கிய அனுராக் காஷ்யப் தமிழ்த்திரையுலகுடம்ன் எப்போதும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios