மலையாளத்தில் வெளியான, 'ப்ரேமம்' படத்தின் மூலம்அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் கேட்கையில் கூறியுள்ளார்.
மலையாளத்தில் வெளியான, 'ப்ரேமம்' படத்தின் மூலம்அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் கேட்கையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: அறுவை சிகிச்சை முடிந்து மயக்க நிலையில் இருக்கும் பிக்பாஸ் அர்ச்சனா..! மகள் சாரா கொடுத்த அப்டேட்!
அனுபமா பரமேஸ்வரன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாரையாவது காதலித்த அனுபவம் உண்டா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அனுபமா பரமேஸ்வரன் நான் ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்க வில்லை. அது தோல்வி அடைந்து விட்டது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பளீச் பதிலளித்துள்ளார். மேலும் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
மேலும் செய்திகள்: 8 வருட காதல் கணவரின்... காரணம் தெரியாத தற்கொலை! சீரியல் நடிகையின் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!

மிகவும் பிடித்த உணவு குறித்து எழுப்பிய கேள்விக்கு... " என் அம்மா கையால் செய்கிற அனைத்து உணவுகளுமே எனக்கு பிடித்த உணவுகள். கேரளா உணவை விரும்பி சாப்பிடுவேன். பிரியாணி மிகவும் பிடிக்கும்". என்று பதிலளித்தார். அதே போல் இசையில் ஆர்வம் அதிகம் என்றும் சமீபத்தில் தமிழில் மம்முட்டி நடித்த 'மௌனம் சம்மதம்' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால்நிலா பாடலை' கேட்டு ரொம்ப பிடித்துப் போனது. நூறு தடவைக்கு மேல் அந்த பாடலை கேட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் சூரரை போற்று..! வெளியான அதிகார பூர்வ தகவல்!

தற்போது தமிழில் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடிக்கிறேன். அனைவருடனும் சகஜமாகவும் அமைதியாகவும் இருக்க விரும்புவதாகவும், மனதை அமைதியாக வைத்து கொன்று வெற்றி தோல்வி இரண்டையும் ஒரே மாதிரி ஏற்றுக் கொள்ள கற்று வருவதாகவும் மிகவும் தெளிவாக ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
