8 வருட காதல் கணவரின்... காரணம் தெரியாத தற்கொலை! சீரியல் நடிகையின் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமான 'ராஜா சின்ன ரோஜா', உள்ளிட்ட சில படங்களிலும், 'நம்ப வீட்டு கல்யாணம்' போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ராகவி, தன்னுடைய கணவரின் இறப்பு குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
ராகவிக்கு திரைப்படங்களை விட சீரியல்கள் தான் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இவர் சுமார் 8 வருடம் காதலித்து, இவரது கணவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் காதல் சின்னமாக அழகிய மகள் என மிகவும் சந்தோஷமாக சென்றது ராகவியின் வாழ்க்கை. அப்போது திடீர் என ஒரு நாள் இவருடைய கணவர் வெளியூருக்கு வேலை விஷயமாக செல்வதாக கூறி சென்றுள்ளார்.
இவர் சென்ற இரண்டு நாட்கள் கழித்து வந்த போன் கால் ராகவியின் வாழ்க்கையையே திருப்பி போட்டது. இவருடைய கணவர் ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தி தான் கிடைத்துள்ளது.
தன்னுடைய கணவர் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்பது இரண்டு நாட்களுக்கு பிறகு தான் ராகவிக்கு தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை பிரச்சனை என்ன என்று தெரியாத நிலையில், எவனோ ஒருவனால்... சற்றும் மகள் மற்றும் மனைவி பற்றி யோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

வீடு முழுவதும் கொட்டி கிடைக்கும் தன்னுடைய கணவரின் நினைவுகளுடன் பயணிப்பதாகவும், இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர தன்னுடைய சீரியல் குழுவினர் அனைவரும் உறுதுணையாக இருந்ததாகவும், தன்னுடைய கணவரின் உடலுக்கு கொல்லி வைத்தது கூட நான் தான் என தெரிவித்துள்ளார் ராகவி. இவரது வார்த்தைகள் கேட்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது.