ப்ளூ சட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இந்தியன்' படத்திற்கு வந்த திடீர் பிரச்சனை! தயாரிப்பாளர் சைபர் கிரைமில் பரபரப்ப

'ஆன்ட்டி இந்தியன்' டிஜிட்டல் உரிமையை பெறாமலையே ஓடிடி தளத்தில் 'ஆன்ட்டி இந்தியன்' திரைப்படம் வெளியாகி உள்ளதாக, தயாரிப்பாளர் ஆதம்பாவா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
 

Anti Indian Producer Adham Bava police station

ப்ளூ சட்டை மாறன் இயக்கி, நடித்திருந்த 'ஆன்ட்டி இந்தியன்' திரைப்படத்தின் OTT உரிமையை பெறாமல், முறைகேடாக OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரிப்பாளர் சங்கத்திலும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும், சைபர் கிரைமுக்கும் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது "எனது மூன் பிக்சர்ஸ், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில், 10.12.2021 அன்று திரைக்கு வந்த ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தின், டிஜிட்டல் உரிமையை நான் விற்காத போது... எனது பட பிரதியை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையில், முறைகேடாகத் திருடி Galaxyott.in  என்கிற ஓடிடி தளத்தில் வெளியிட்டு, எனக்கும் எனது நிறுவனத்திற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது சம்பந்தமாக கேலக்ஸி ஓடிடி சதாசிவமூர்த்தி என்பவரை தொலைபேசி எண்ணில் அழைத்து பேசிய போது, அவர் கேசவ் சினிமாஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து உரிமத்தை வாங்கியதாக கூறினார்.

ஒரே இடத்தில் அமர்ந்து.. தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்! வைரலாகும் BTS புகைப்படங்கள்

Anti Indian Producer Adham Bava police station

மேற்படி கேசவ் சினிமாஸை தொடர்பு கொண்டு பேசிய போது, அருண் வீடியோஸ் சுப்பிரமணியிடம் நான் உரிமை பெற்றுள்ளேன் என்று கூறினார். அந்த நம்பரை தொலைபேசியில் அழைத்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசி சரியான பதில் கூறவில்லை. இந்நிலையில் குற்றம் செய்தவர்கள் சார்பாக ஜக்குவார் தங்கம் அவர்கள், தனது தொலைபேசி தொலைபேசியில் வந்து எனது கில்டு சங்க உறுப்பினர்கள் குற்றம் இது. தவறுதலாக நடந்து விட்டது. அவர்களை மன்னித்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுகிறார். இக்குற்ற செயலுக்கு ஒரு கூட்டமே உள்ளதாக அறிகிறேன். இது தொடர்பாக சைபர் கிரைனில் புகார் செய்துள்ளேன். இதனால், எனது 'ஆன்ட்டி இந்தியன்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்க முடியாத அளவிற்கு எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மேலும் என் படம் தவிர சங்க உறுப்பினர்களின் மற்ற படங்களும் இதேபோன்று ஒளிபரப்பிற்குள்ளானதை அறிகிறேன். எனவே உடனடியாக மேற்படி குற்றவாளிகள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு மீதி வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என ஆதம்பாவா எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் அறிவுசார் சொத்துரிமை அமலாக பிரிவு காவல் நிலையத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் புகார் கொடுத்துள்ளார்.

பிரபு தேவா மகளின் பெயர் இதுவா... குழந்தை பெயரை வைத்து நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் விளையாடுகிறாரா மாஸ்டர்?

Anti Indian Producer Adham Bava police station

விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஏற்கனவே திருடி தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,  தற்போது டிஜிட்டல் உரிமையை பெறாமலேயே இதுபோல் ஓ டி டி தளங்களில் படங்களை வெளியிடுவது தென்னிந்திய திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios