இன்றைய முதல் புரோமோவில், அனிதா தங்களுக்கு என்று ஒரு வீடு கூட இல்லை என, எமோஷ்னலாக அழுதும், பின் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், என்னுடைய பெயர் கேட்டு போய்விட கூடாது, என பேசிய காட்சிகள் சில ரசிகர்கள் மனதை கரைக்கும் படி இருந்தாலும், எப்ப பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறார் அழு மூஞ்சி அனிதா என சிலர் மத்தியில் விமர்சனங்களும் பறந்து வருகிறது.

 

மேலும் செய்திகள்: 'சூரரை போற்று' படம் குறித்த தகவலுக்கு சூர்யா வைத்த முற்று புள்ளி..!
 

இந்நிலையில் தற்போது இரண்டாவது புரோமோவில், சுரேஷ் சக்கரவர்த்தி எழுந்து வந்து பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதே நேரம் அனிதா அவருக்கு புரோமோவில் வர வேண்டும் என்று மிகவும் ஆசையா இருக்கு, என்னை பற்றி பேசினால் அவரை புரோமோவில் போடுவார்கள் என, சண்டைக்கு சம்மந்தமே இல்லாமல் சோமிடம் கூறுகிறார். ஏற்கனவே அவர் பிரபலம் என்பதை அறியாமல் அனிதா அவர் பிரபலம் ஆக வேண்டும் என ட்ரை பண்ணிட்டு இருக்காரு என்றும் வார்த்தையை விடுகிறார்.

இதை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் காட்சிகள் காட்ட படுகிறது. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன் என கூறி தன்னுடைய, பேச்சை துவங்குகிறார். அப்போது அனிதா நேகத்தை கடித்து கொண்டு ஆங்கிரி பேர்டு போல பார்க்கும் காட்சியும் காட்ட படுகிறது. மேலும் சுரேஷ் நான் உங்களை ஏதாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள், என்கிற ஒற்றை வார்த்தையில் அசால்ட் செய்கிறார்.

மேலும் செய்திகள்:பாவாடை தாவணியில் பட்டாம் பூச்சி போல் போஸ் கொடுத்த “பாண்டியன் ஸ்டார்” முல்லை..! புகைப்பட தொகுப்பு..!
 

பின்னர் அனிதா பேசுவதும் காட்ட படுகிறது. இதை தொடர்ந்து பேசும் சுரேஷ், நான் கடுமையான போட்டியாளராக இருந்து யார் வெற்றி பெற்றாலும் நான் வெற்றி பெற்றது போல்... சந்தோஷ படுவேன் என கூறுவது போல் இந்த புரோமோ முடிவடைகிறது.