அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ள நாய் சேகர் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகர் என்கிற நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். அப்படத்தின் காமெடி பிரபலமானதைப் போலவே, நாய் சேகர் என்கிற பெயரும் மிகவும் பேமஸ் ஆனது. தற்போது அந்த பெயரில் படம் ஒன்றும் உருவாகி உள்ளது. 

நாய் சேகர் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ளார். சதீஷ் மற்றும் ஒரு நாயை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதால், இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என எண்ணி படக்குழுவினர் இந்த தலைப்பை வைத்துள்ளார்களாம். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடித்துள்ளார். 

அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு லிரிக்ஸ் எழுதி உள்ளதாகவும், அப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளதாம்.

ஏற்கனவே டாக்டர் படத்தில் அனிருத் இசையமைத்த செல்லம்மா, சோ பேபி போன்ற பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதிய சிவகார்த்திகேயன், அடுத்ததாக பீஸ்ட் படத்திலும் அனிருத் இசையமைக்கும் ஒரு பாடலுக்கு லிரிக்ஸ் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…