அனிருத் இசையில் இந்தியன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நீலோர்பம் என்கிற ரொமாண்டிக் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தியன் 2 திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றனர். இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் அப்டேடுகளும் லைனாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Atlee: இந்திய சினிமாவில் யாரும் பெறாத மிகப்பெரிய சம்பளம்.? அட்லீயை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்!

அந்த வகையில் கடந்த வாரம் இந்தியன் 2 படத்தில் இருந்து பாரா என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 2-ந் தேதி நடைபெற உள்ள ஆடியோ லாஞ்சில் எஞ்சியுள்ள பாடல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் சர்ப்ரைஸாக அப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

அதன்படி நீலோர்பம் எனும் ரொமாண்டிக் பாடலை தான் தற்போது ரிலீஸ் செய்து உள்ளனர். இப்பாடலை அப்பை மற்றும் ஸ்ருதிகா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வரிகளை தாமரை எழுதி உள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Indian 2 - Neelorpam Lyric Video | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca

இதையும் படியுங்கள்... Vanangaan : இந்தியன் 2-வுக்கு போட்டியாக வணங்கான்... ஷங்கருக்கு ஷாக் கொடுக்க தயாராகிறாரா பாலா?